காத்தான்குடி ஹிழுரியா பள்ளிவாயல் குர்ஆன் மாதரா புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி ஊர் வீதி ஹிழுரியா பள்ளிவாயல் குர்ஆன் மதரசா புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (10.08.2018 வெள்ளி) இன்று காலை 06.30  பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் M.B. காலித் JP தலைமையில்  இடம் பெற்றன.

காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JP  ஊடாக
கிடைக்கப் பெறும்  பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் 3 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக இதன் போது தெரிவித்தனர்

மேற்படி புதிய கட்டிடம்  அல் குர்ஆன் மதரசா, மக்தப் பிரிவு, பெண்கள் தொழுகை என்பன வற்றிக்காக பயன் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்த்தது.

புதிய கட்டிடம் அமையப்பெறும் இடமானது மர்ஹூம் M.I..இப்றாஹீம் ஹாஜியார் (CB. காசிம் மருமகன்)
என்பவரினால் வக்பு செய்யப்பட்.டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JP, அல்ஹாஜ் MACM. பதுர்தீன், மெளலவி M. அலியார், Am.அமீன் (பலாஹி) உப்பட பலரும் கலந்து கொண்டனர்.No comments