இமாரா பௌண்டேசன் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஆரோக்கியமும் சுகவாழ்வும் விழப்புணர்வு கருத்தரங்கு

(மதியன்பன்) 


ஆரோக்கியமும் சுகவாழ்வும் எனும் தொனிப் பொருளினான மக்களை விழிப்பூட்டும் கருத்தரங்கொன்று இன்று (05.08.2018) காத்தான்குடியில் இடம்பெற்றது. காத்தான்குடி பிர்தௌஸ் பள்ளிவாயல் ஒன்றுகூடல் மண்டபத்தில் இமாரா பௌண்டேசன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கினை சகோ. அஸாம் அவர்கள் தலைமை தாங்கி நடத்திவைத்தார்கள் இக்கருத்தரங்கில் வளவாளர்களாக வைத்தியக் கலாநிதிகளான Dr. T சுந்தரேசன் MBBS.FRCP in Medician, Dr. MM. றிபாஸ். MBBS. PhD in Healthஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைகளை வழங்கினர் இதன்போது மனிதனின் உடலும் உள்ளமும் அவற்றின் ஆரோகிகமும் எனும் தலைப்பில் சுந்தரேஸ்வரன் அவர்களும் மக்களின் இன்றைய உணவு பழக்க வழக்கங்களும் தேவைப்படும் மாற்றங்களும் எனும் தலைப்பில் றிபாஸ் அவர்களும் விரிவான விளக்கங்களை வழங்கினர். உரைகளின் முடிவில் கலந்து கொண்டோர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வளவாளர்களினால் தெளிவுகளும் வழங்கப்பட்டன. 
சகோ. உவைஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் சகோ. ஹாரிஸ் அவர்களினால் நன்றியுரையும் வழங்கப்பட்டடது. No comments