வைத்தியசாலையில் வாழ்வைக் கழிக்கும் உறவுகளோடு ஹஜ் பெருநாளைக் கொண்டாடிய "HHH" நிறுவனத்தினர்.ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் "HHH" நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும்  மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர்களோடு இணைந்து இன்று (22) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடி மகிழ்விக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன்   "HHH" நிறுவனத்தின் அங்கத்தவர்கள் பலர்  இணைந்து  கொண்டனர்.

தியாகப் பெருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினமாகிய இன்று  மேற்படி  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர்களின் காலைக் கடமை உட்பட புத்தாடை அனிவித்து, நறுமனம் பூசி, உணவு பண்டம் வழங்கி புனித நாளில் அவர்களை மகிழ்வித்தமை விசேட அம்சமாகும்.

இதன் போது பல ரூபாய் பெறுமதியான சாரன்களை  "HHH" நிறுவனத்திற்கு அன்பளிப்புச் செய்த சகோதரர் ஸப்ரி பசீர் அவர்களும் "HHH" நிறுவனத்தினரின் இன்றைய கள விஐயத்தில்   இணைத்து கொன்டார்.

No comments