காத்தான்குடி கடற்கரை அழகு படுத்தும் திட்டம் மிக விரைவில் நகர முதல்வர் அஸ்பர்

ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி கடற்கரையை நவீன முறையில் அழகு படுத்தும் திட்டம் மிக விரைவில்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக  நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர்
தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரை பல வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு ( தாளம்பத்தை, அடம் பன் கொடி) உடன் காட்சியளித்ததோ அவ்வாறு அவற்றினை மீண்டும் காத்தான்குடி கடற்கரை பகுதியில் நட்டு அழகுபடுத்த  நாம் திட்டமிட்டுள்ளதுடன் இன்றைய இளவயதினருக்கு தெரியாத "ராவணன் மீசை செடி" போன்றவற்றையும் கொண்டு வந்து  நட திட்டமிட்டுள்ளோம் என்று காத்தான்குடி  நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர்
தெரிவித்தார்.

அதே போன்று  காத்தான்குடி  கடற்கரை வடக்குப் பக்கமாக உள்ள பகுதிகளுக்கும்  நடைபாதை  மற்றும் நவீன லைட் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும்  இதன் போது தெரிவித்தார்.

No comments