பிரதி அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்களிடம் இருந்து ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்திஉலகம் முழுவதிலுமாக இன்றைய நாளில் தியாகத்தை பறை சாற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகை அடைகின்றேன் .

எம்மிடையே நிலவும் முரண்பாடுகள் தளர்த்தப்பட்டு இஸ்லாம் காட்டித் தந்துள்ள பொறுமை , சகிப்புத் தன்மை , தியாக உணர்வு, விட்டுக்கொடுப்பு , அனைவருடனுமான நல்லிணக்கம் -சகவாழ்வு என்பவற்றை கடைப்பிடித்து நிலையான அமைதியினை நோக்கியதாக பயணிக்க இப்பெருநாள் தினத்திலே உறுதி பூளுவோமாக !

தியாக மனப்பாங்கானது எமது உள்ளங்களில் ஊற்றெடுத்து விருட்சங்களாய் விரியும் போது குறுகிய எண்ணங்களும் , இறுகிய மனப்பாங்குகளும் இல்லாமல் போய் விடும், எனவே இன்று மலர்ந்துள்ள இத்தியாகத் திருநாளிலே புத்துலகொன்றை நோக்கியதாய் கையுடன் கை பிணைத்து , தக்பீர் முழங்கிட, ஸலாம் -முஸாபஹா மூலம் எமக்கிடையே ஒற்றுமையினை பலப்படுத்திக் கொள்வோமாக-

இனிய இஸ்லாமிய நெஞ்சங்கள் அனைவருக்கும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை சமர்ப்பித்தவனாக விடை பெறும் உங்கள் அன்பின்,

செய்யித் அலி சாஹிர் மௌலானா, 
பிரதி அமைச்சர்,
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு

No comments