ஸலாமா சமூக நல கலாச்சார பேரவைக்கு பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா வினால் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு:

(
ஊடகப் பிரிவு

ஏறாவூரில் பல்வேறு சமூக நல மற்றும் கல்வி , கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் முன்னின்று செயற்படும்  ஸலாமா சமூக நல கலாச்சார பேரவையின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித்  அலி சாஹிர் மௌலானா அவர்களால் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிர்வு(19.08.2018 ஞாயிறு) அஷ்செய்க் நழீம் (நழீமி) தலைமையில் நடைபெற்றது.

ஏறாவூர் பெண்பாடசாலை வீதியில் அமைந்துள்ள ஷாதுலிப்பள்ளி வாயல் கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதியமைச்சர் அவர்களால் குறித்த போட்டோ பிரதி இயந்திரம் ஸலாமா அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்த்கது.

இதன்போது அஷ்பால் அகடமியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இர்ஷாத் , மாவட்ட கணக்காளர் பஸீர் , பிரதியமைச்சரின் இணைப்பாளர் முன்னாள் அதிபர் சயீட் உட்பட சலாமா நிறுவன உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.