விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோாி சம்மாந்துறையில் ஆா்ப்பாட்டம்
-ரீ.கே -றஹ்மத்துல்லா

சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி அப்பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து இன்று(23) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

மாவடிப்பள்ளி சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டம் மாவடிப்பிள்ளி பிரதான வீதியில் நூற்றுக்கணக்கானோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.  இதில் கலந்து கொண்டோர் குறைபாடுகள் மற்றும்  தேவைகள், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசமெழுப்பியவாறு பிரதான வீதியூடாகச் சென்று அல்- அஸ்ரப் வித்தியாலயம் வரை சென்றடைந்தனர்.

 சுமார் 1050 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராம்தில் 12 க்கும் மேற்;பட்ட விiயாட்டுக் கழகங்கள், பல இளைஞர் கழகங்கள் இயங்கி வருகின்ற இக்கிராமத்தில் மிக நீண்டகாலமாக விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறாமையானது பாரிய குறைபாடகவே இருந்து வருவதாக மாவடிப்பள்ளி சமூக அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.அமீன் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் கூறுகையில், இக்கிராமத்தில் பல இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை ஏற்படுத்தி இப்பிரதேசத்திற்கும், மாகாணத்திற்கும் மட்டுமால்லாது தேசத்தின் கீhத்திக்கும் காரணமாக இருந்து வருகின்றனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள், இளைஞர் கழகங்களின் வீரர்களுக்கும் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டு மைதானம் இங்கு அமையப்பெறாமை பாரிய குறைபாடாகவே இருந்து வருகின்றது.

இக்குறைபாடுகள் தொடர்பில் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பிரதேச அரசியல் தலைவர்களிடம் எடுத்துக் கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்கு நிலையிலையே இவ்விடயம் கிடப்பில் இருந்து வருகின்றது. இவ்விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்து பல முறை இப்பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வருபவர்கள் தாம் பதவிக்கு வந்ததும் இவ்விடயத்தினை மறந்து செயற்படுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, கிராமத்திற்கு ஒரு மைதானம் அமைப்பதாகக் கூறியிருந்தது. தற்போது அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடையும் காலம் நெருங்கியுள்ள நிலையிலும் கிராம மக்களின் நலனில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

 தொடர்ந்தும் எமது கோரிக்கைகள், போராட்டங்கள் அரசாங்கத்தினாலும், அதிகாரிகளினாலும் புறக்கனிக்கப்பட்டு வருமாயின் இனிவிரும் காலங்களில் கிராம மக்களை ஒன்றிணைத்து தொடரான பாரிய ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி முழு தேசத்திற்கும் எமது குறைபாடுகளை எடுத்துக் கூறி இம்மiதானத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக  மாவடிப்பள்ளி சமூக அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.