இந்திய மண்ணில் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானாவிற்கு கௌரவம்

ஊடகப்பிரிவு

இந்தியா திருச்சிராப்பள்ளி  ஜமால் முஹம்மட் கல்லூரியின் வருடாந்த பழைய மாணவர் ஒன்றுகூடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி அப்துல் கபூர் மண்டபத்தில் கல்லூரி முதல்வர் முனைவர்  இஸ்மாயில் முஹைதீன் தலைமையில் நடைபெற்றது-

இதில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொன்டு விஷேட உரை ஒன்றினையும் ஆற்றினார்.

நிகழ்விலே பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா  அவர்களின் பணிகளைப் பாராட்டி  கல்லூரி நிர்வாகம் விஷேட விருது ஒன்றினை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா  இந்தியா -திருச்சி ஜமால் முஹம்மட் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

No comments