உயிராபத்தை எதிர் நோக்கியுள்ள காங்கேயனோடை இக்றா வித்தியாலய மாணவர்கள்.


விசேட நிருபர்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் காங்கேயனோடை மட்/மம/
இக்றா வித்தியாலயத்தில் உள்ள பனைமரம் ஒன்றில் இராட்சத கருங்குளவிக்கூடு ஒன்று இருப்பதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் தினம் தினம் உயிராபத்தை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


மேலும் தெரியவருவதாவது குறித்த இராட்சத குளவிக்கூட்டினை மரத்திலிருந்து அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அதிபரினால் தகவல் கொடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.


குறித்த குளவிக் கூட்டின் அச்சம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வகுப்பறைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாக இதன் போது தெரிவிக்கின்றனர்.

மேற்குறித்த குளவிக் கூட்டினை அகற்றுவதில் ஏற்படுகின்ற தாமதம் மாணவர்களின் உயிராபத்தை தோற்றுவிக்கும் என்பதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற் கொள்வது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்....?

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே................
கல்வி அதிகாரிகளே.........
பாடசாலை அதிபரே..........
பாடசாலை அபிவிருத்திச் 
சங்க உறுப்பினர்களே.,,,,,,,,,,,
இது உங்கள் கவனத்திற்கு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.