சர்வதேச கணிதப்போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சாதனை.

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 08 கல்வி பயிலும் மாணவன் KLM. இன்சாப் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணிதப்போட்டியில் வெண்கலப்பதக்கப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேற்படி மாணவனை வாழ்த்தி, வரவேற்று, கெளரவிக்கும் நிகழ்வு (03.08.2018 வியாழன்) இன்று காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பிரதி அதிபர் MLM. லாபிர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்தீன், கணிதப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் SMYK. நஸீம், மாணவனின் தந்தை பொறியலாளர் M. கலந்தர் லெப்பை, ஒய்வு பெற்ற கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் MCM. முஸ்தபா, SDC உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலத்து கொன்டனர். இதன் போது சாதனை படைத்த மாணவன் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.


No comments