ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளர் கடமையினை பொறுப்பேற்பதில் காலதாமதம்!

(எம்.எஸ்.எம்.நவாஸ்தீன்)

ஏறாவூர் நகர சபையில் வெற்றிடமாக காணப்பட்ட செயலாளர் பதவிக்கு ஏரூரை பிறப்பிடமாக கொண்ட MR.சியாவுல் ஹக் (SLAS) அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் நியமிக்கப்பட்ட போதிலும் அவர் தன் கடமையினை பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தெரிய வருவதாவது MR.சியாவுல் ஹக் தற்போது செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாநகர சபைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் கடமையாற்ற வேண்டும்  என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதனால் ஏறாவூர் நகர சபையின் செயலாளராக  MR.சியாவுல் ஹக்    கடமையை பொறுப்பெடுத்துக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிய  முடிகின்றது

No comments