காத்தான்குடி தள வைத்தியசாலை அருகில் உள்ள வெற்றுக்காணிகளில் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற் கொள்ள முடியாது.


எ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி தள வைத்தியசாலை (கிழக்கு, தெற்கு) பக்கமாக  உள்ள காணிகளில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் மேற் கொள்ள அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் நகரசபை கூடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர சபை உறுப்பினர் ஏ.எம்.பௌமி JP தெரிவித்தார். 

காத்தான்குடி தள வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு வைத்தியசாலைக்கான நிலத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில்  வைத்தியசாலை அருகில் உள்ள வெற்றுக்காணிகளை அதன்  உரிமையாளர்களின் சம்மதத்துடன் பெற்றுக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி காணி விடயமாக அதன் உரிமையாளர்களுடன் கலந்தாலேசித்து காணியின் பெறுமதிக்கேற்ப பணத்தினை மக்கள் பங்களிப்புடன்  பெற்றுக் கொடுக்க நவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எம்.பௌமி JP தெரிவித்தார்.
No comments