மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார அமைச்சரின் இணைப்பாளருடன் சந்திப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலைசாலையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் சுகாதார பிரதியமைச்சரின், ஊடகச் செயலாளரும், பிரதி அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எம்.கபீர் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.


இச்சந்திப்பானது பிரதி அமைச்சரின் இணைப்பாளரின் இல்லத்தில் 2018.08.13  இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கோறளைப்பற்று  மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் அவர்களும் கலந்துகொண்டார்.


இச்சந்திப்பில் வைத்தியசாலைக்கு மூன்று மாடிக்ககட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு அபிவிருத்திக் குழுவினர் பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கமைவாக அதனை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள  இறுதி கட்ட நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


அத்துடன், வைத்தியசாலைக்கு மேலும் இரு வைத்தியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் சுகாதார அமைச்சினூடாக மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சரின் இணைப்பாளர் தெரிவித்தார்.


மூன்று மாடிக் கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெறுவதற்காக சுகாதார அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்மைக்கான கடிதம் மிக விரைவில் தங்களின் கைகளில் கிடைக்க இருப்பதான சந்தோசமான செய்தி ஒன்றினையும் இச்சந்திப்பின்போது பிரதி அமைச்சரின் இணைப்பாளர் அபிவிருத்திக் குழுவினரிடம் தெரிவித்தார்.


மேலும், இவ்வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக சகல வசதிகளையும் கொண்ட கட்டிடமாக இது அமையப்பெறவுள்ளது

எம்.ரீ. ஹைதர் அலிNo comments