கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வது குறித்து ஜப்பான் தூதுக்குழு ஹிஸ்புல்லாஹ்வுடன் இன்று பேச்சு


கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொண்டு புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஜப்பான் நாட்டின் வியாபார தூதுக் குழுவுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். 

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இன்று {14} செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டின் பிரபல தொழிலதிபர்  Ichihara தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்து கொண்டனர். 

இதன்போது, கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களது பயிற்சி நெறியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.No comments