சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகாவித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

(01.08.2018)
(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகாவித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் அக்கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஐ. மதனி தலைமையில் நேற்று (30) திங்கட்கிழமை மாலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது குறித்த பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

இக்கல்லூரி மற்றும் இப்பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அமைச்சர் ஹரீஸ் அவ்வப்போது பெரிதும் பங்களிப்புச் செய்து வந்துள்ளார். சமூக நலன் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்படக்கூடிய ஒருவர், எம்மைப் புரிந்துகொண்டவர், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவு கூர்ந்து இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிப்பதாக தெரிவித்த கல்லூரி அதிபர் மதனி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எடுத்துக் கூறினர். 

சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தை மல்ஹர் சம்ஸ் மகளிர் வித்தியாலயமாக மாற்றம் செய்து தருமாறும் குறித்த பாடசாலைக்கு நுழைவாயில் கோபுரம் மற்றும் ஆராதனை மண்டபம் உள்ளிட்ட உள்ளக அபிவிருத்திகளை செய்து தருமாறும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். 


குறித்தி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கட்டம் கட்டமாக நிறைவு செய்து தருவதாக இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.