அண்ணாவை சந்திக்க புறப்பட்ட கருணாநிதி.. அண்ணா சாலையை கடந்து கண்ணீரில் மிதந்து செல்கிறார்

சென்னை: மாலை 4 மணிக்கு கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் இதற்காக ராஜாஜிஹாலுக்கு வந்திருந்தது. அதில் புகழுடல் ஏற்றப்பட்டு ஊர்வலம் துவங்கியது.
காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து நள்ளிரவில் கோபாலபுலம் இல்லத்திற்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர அஞ்சலிக்கு பிறகு சிஐடி காலனிக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது.

No comments