ஹோட்டலில் இருந்த சிலின்டர் தீப்பிடித்ததில் உரிமையாளர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார் காத்தான்குடியில் சம்பவம்.

ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடி சுஹதா வீதி நகர சபைக்கு முன்னாள் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை கேஸ் சிலின்டர்  தீப்பிடித்ததில் கடை உரிமையாளர்  ஹாமிது லெப்பை (மங்கா றைவர்) மயிரிழையில்  உயிர்தப்பியுள்ளதுடன்  கடையிலிருந்த பல பொருட்கள் தீக்கரையாகியுள்ளதுடதுன் தலைமுடிகள் பொசுங்கிய நிலையில் உரிமையாளர்   காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும் தெரிய வருவதாவது சம்பவம் இடம் பெற்ற வேளை கேஸ் சிலிண்டர் தீப்பற்றியதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர குடும்பத்தினர், அயலவர்கள் , கேஸ்கம்பனி ஊழியர்கள் என பலரின் உதவியுடன்  நிலைமை கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரப்பட்டதாக  தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளை
குறித்த கடைக்கு முன்னால் உள்ள சுஹதா பள்ளிவாயலில் இருந்த பாகிஸ்தான் ஜமாஅத்தினர் பெரிதும் உதவியதாக பலரும் தெரிவித்தனர்.

இத்தனைக்கும்
கேஸ் சிலின்டரில் ஏற்பட்ட வாயு கசிவே காரணம் எனத் தெரிய வருகின்றது.


(

No comments