மனிதநேய உதவுங் கரங்கள் "HHH" அமைப்பின் மனிதாபிமான பணிகள்


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடியை தலைமையாகக் கொண்டு இயங்கும் மனித நேய உதவுங் கரங்கள்  "HHH"
அமைப்பின் மனிதாபிமான பணிகள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.பௌமி JP தலைமையில் இடம் பெற்று வருகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.பௌமி
தங்களது HHH நிறுவணத்தின் தலைமைக் காரியாலம் காத்தான்குடி கடற்கரை வீதிமத்திய கல்லூரி (இர்ஷாத் பள்ளிவாயல்) முன்பாக இயங்குவதாக தெரிவித்தார்.

வீடுகளில் முடங்கி சரியான வைத்திய பராமரிப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் விபரங்களைத் திரட்டி கட்டம் கட்டமாக எமது சக்திக்கு உட்பட்ட வகையில் வைத்தியர்களின் மேலான பங்களிப்புடன் மேற் கொண்டு வருவதாக இதன் போது தெரிவித்தார்  அதனடிப் படையில்  கடந்த (10) வெள்ளிக்கிழமை காத்தான்குடி, கர்பலா,பாலமுனை போன்ற பகுதிகளுக்குச் சென்று பல நோயாளிகளை பார்வையிடக் கிடைத்தது மாத்திரமின்றி சிலருக்கு அவசர மாதாந்த உதவிகள் கொடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் இதன் போது  தெரிவித்தார்.
No comments