பெண்களுக்குத் தனியான மாபெரும் ஹஜ் பெருநாள் மலிவு பஸார்.

03.08.2018
ஏ.எல்.டீன் பைரூஸ்

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பு (WEDF) இணைந்து பெண்களுக்கான தனியான மாபெரும் ஹஜ் மலிவு பஸார் ஒன்றினை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


மேற்படி பெண்களுக்குத் தனியான ஹஜ் பெருநாள் மலிவு பஸார் ஏற்பாடுகள் என்பது பல இறுக்கமான நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் வியாபாரம் செய்பவர்கள் பெண்களாகவே இருப்பர் என்றும் ஏற்பாட்டாளர்கள் இதன் போது தெரிவித்தனர். மேற்படி வியாபார நடவடிக்கைகளை எதிர் வரும் 12.08.2018 முதல் ஹஜ் பெருநாள் தினம் வரை நடாத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலதிக விபரம் அறிய தொடர்பு கொள்ள. 0762112856

No comments