சொய்ஸா கொலை தொடர்பில் சி.சி.டீ.வி. தடயங்கள்பிரபல கராட்டே வீரரும் இரவு விடுதியின் சொந்தக் காரருமான வசந்த சொய்ஸா கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது கொலை தொடர்பான தடயங்கள் சீ.சீ.டி.வி. ஊடாகப் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ‘கடபணஹ’ பகுதியிலுள்ள இவரின் இரவு விடுதியில் நேற்று முன்தினம்(24) இரவு 11.45 மணியளவில் தலைக் கவசங்களுடன் வந்த கும்பலொன்று ஆயுதங்களினால் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வடமத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ விஜே குணவர்தன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீர சிங்க ஆகியோரின் உத்தரவில் தொடர்ந்தும் மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.