இஸ்ரேலில் அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் கைது

தெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.

மேலும், மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments