இரண்டு நாட்கள் பயணமாக நாளை மாலைத்தீவுக்கு செல்லும் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலைத்தீவுக்கு செல்கிறார்.

அங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,

கடந்த 2000மாவது ஆண்டு இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.

தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

தனது பயணத்தின் போது சுஷ்மா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனையும் சந்திக்கிறார்.

இதன்போது அவருடன் பொருளாதாரம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

இதனையடுத்து, இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாலத்தீன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்.

மேலும் மாலத்தீவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் உருவாக வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.