மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் ஊடகத்துறை பட்டப்படிப்பு கற்கைநெறியை ஆரம்பிக்க கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகம் இணக்கம்.

(ஊடகப்பிரிவு) 

ஜித்தாஹ் கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் ஊடகத்துறையில் பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் ஊடக கற்கைநெறியினை ஆரம்பிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கல்லூரியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜித்தாஹ் கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதில் கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஊடக பட்டப்படிப்பு கற்கைநெறியினை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கும் வகையிலேயே இப்பேச்சுவார்த்ததை இடம்பெற்றதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் ஜித்தாஹ் கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் டொக்டர் ஸலாஹ் பா உத்மான் டொக்டர் பஹத் டொக்டர் அப்துர் றஹ்மான் ஒலீயா ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.