அன்வர் வட்டாரத்தின் கர்பலா உள்ளக வீதி மக்களின் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது(ஆதிப் அஹமட் )

காத்தான்குடி கர்பலா உள்ளக வீதியானது மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாது  காணப்பட்டது.கர்பலா வீதியையும் அல் அமீன் வீதியையும் இணைக்கின்ற மிக நீண்ட இவ்வீதியை புனரமைத்து தருமாறு  அன்வர் வட்டாரத்தில் கடந்த நகரசபைத்தேர்தலில் போட்டியிட்ட நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச்செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களிடம் தேர்தல் காலத்தில் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த நகரசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதி ஒதுக்கீடு ரூபா இருபது இலட்சம் செலவில் கொங்கிறீற்று வீதியாக இவ்வீதியும் அதனோடு இணைந்த சிறிய குறுக்குகளும் புனரமைக்கப்பட்டுள்ளது.இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் அண்மையில் இடம்பெற்றபோது யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.