உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்




உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹமாட் அலி ஜிலானுக்கும் உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இல்லத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகள் அதன் பணிகளை இலங்கையில் முன்னெடுப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், அதனை இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது. 

இதேவேளை, உலக முஸ்லிம் லீக்கின் மூலம் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதன் கிளையொன்றினை இலங்கையில் திறந்து அதனை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  

இந்த கலந்துரையாடலில் அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, அல்-ஹாஜ் ஜிப்ரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறுpப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.