வவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்...




(பஹ்த் ஜுனைட்)

நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையிலான வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார்,பிரதம கணக்காளர் திரு.பாலகுமார் உள்ளிட்ட  குழுவினரின் நல்லிணக்க சுற்றுலாவின் ஒரு அங்கமாக ஞாயிற்றுக்கிழமை (16) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடனான சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டனர்.



காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் ஏ.அஹமதுலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் காத்தான்குடி சம்மேளனத்தின் நிர்வாக கட்டமைப்பு, சேவைகள், முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பேசப்பட்டதுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இவ் சிநேகபூர்வ சந்திப்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் மற்றும் சம்மேள நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்த குழுவினரோடு சிநேகபூர்வமாக கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.