பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் மனிதாபிமான செயல்பாடு தொடர்பில் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய பாடசாலை சமுகம் பெருமிதம்..


ஊடகவியலாளர் டீன்பைரூஸ்

மட்/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் தரம் எட்டு கல்வி பயின்ற மாணவிகள் இருவர் கடந்த வருடம் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டிகளில் பங்கேற்று Gold மற்றும் Silver பதக்கங்கள் பெற்று சாதனை படைத்திருந்தனர். சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த மேற்படி மாணவர்களை பாராட்டி கௌரவித்த நிகழ்வு பாடசாலையில் கடந்தாண்டு நடை பெற்ற போது அந்நிகழ்வில் பொறியியலாளர் சிப்லி பாறுக் கலந்து கொண்டிருந்தார்.

மேற்படி பாடசாலை மாணவிகள் இருவரும் மிகவும் திறமைசாலிகள் என்பது மாத்திரமின்றி மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயின்று வருகின்றார்கள் அதிலொரு மாணவி தந்தை இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற தகவலை அறிந்த பொறியியலாளர் சிப்லி பாறுக் மேற்படி மாணவர்கள் க.பொ.த.சா.தரம் கல்வி பயிலும் வரையான காலப்பகுதிகளில் மேற்படி இரு மாணவிகளின் கல்வி செலவீனங்களை தான் பொறுப்போற்பதாக அன்று கொடுத்த வாக்குறுதிக்கமைய உதவுத் தொகையினை நேரினில் சென்று கடந்த வாரம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொறியியலாளர் சிப்லி பாறுக்.....
எங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணிகளை இறைவனுக்கு அஞ்சியவர்களாக எம்மால் செய்ய முடிந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னால் காத்தான்குடி நகர உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.