ரைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த கல்வி மான்களுடனான கலந்துரையாடல்

(S.சஜீத்)
ரைஸ் ஸ்ரீலங்கா (RISE Sri Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்துரையாடல்  (01.12.2018) சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காத்தான்குடி ஜூமைரா பீச் பெலஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. 

நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் HMM ஹமீஸ் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,  காத்தான்குடி போன்ற பிரேதேசங்களுக்கு ஆய்வு நிறுவனம் ஒன்றின் அவசியப்பாடு தொடர்பில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பொறியியலாளர் MI அப்துல் றஊப் விளக்கமளித்தார். 


மேலும் RISE Sri Lanka இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் அவற்றின் முடிவுகள் தொடர்பில்  நிறுவனத்தின்  பணிப்பாளர் சபை உறுப்பினர் மிருக வைத்தியர்  S.D.M  மாஹிர் அவர்கள் விளக்கமளித்ததுடன் நிறுவனம் பற்றிய அறிமுகத்தை அதன் தவிசாளர் KMM நவாஸ் தொகுத்து வழங்கினார்.


இதன்போது  நிறுவனத்தின் தற்போதைய அவசியப்பாடு  தொடர்பில் குழுக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

RISE Sri Lanka நிறுவனமனது காத்தான்குடியையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் இலக்குப்படுத்தி, விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் மற்றும் தகவல் திரட்டல்கள் ஊடாக  நிரந்தர மற்றும் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் ஒரு அமைப்பாகும்.


காத்தான்குடியிலுள்ள  முக்கிய துறைசார் ஆளுமையாளர்களின் பங்களிப்புடன் இயங்கிவரும் RISE Sri Lanka நிறுவனமனது, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, நிலப்பிரச்சினைகள், வரலாறு மற்றும் சிறிய,நடுத்தர வியாபாரம் போன்ற முக்கிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு பொருத்தமான திட்டங்களை முன்மொழிவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.