சிறப்பாக இடம் பெற்ற மாகாண மொழிப் பயிற்சிப் பாசறை-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் தொடர்ச்சியாக மொழிப் பயிற்சிப்  பாசறைகள் இடம்பெற்றுவருதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்; கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.


போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண மொழிப் பாசறை பயிற்சியின் இறுதி நிகழ்வில் பங்குபற்றியோர் பரஸ்பர மொழித் தேர்ச்சிப் பிரயோக நிகழ்வுகளையும் நடாத்தினர்.


அத்துடன் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்; கணேசமூர்த்தி கோபிநாத்  வெல்லாவெளி உதவிப் பிரதேச செயலாளர் எஸ். புவனேந்திரன், வளவாளர்கள், பயிலுநர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.