வைத்திய அதிகாரி பயணம் செய்த காரின் சில்லு வெடித்ததால் விபத்து-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 
மட்டக்களப்பு – கொழும்பு நெடுங்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் வியாழக்கிழமை பகல் 06.12.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி வைத்திய அதிகாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கே. சுகுமார் பயணம் செய்த காரின் டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மரத்தில் மோதி நின்றுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்றவுடன் காரில் பொருத்தப்பட்டிருந்த காற்றழுத்த பை (AirBag)  கணப்பொழுதில் சுயமாக இயங்கியதால் தான் எதுவித காயங்களோ உயிராபத்தோ இன்றி காப்பாற்றப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் விபத்தில் கார் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடமை முடிந்து மட்டக்களப்பு நகரிலுள்ள தனது வீடு நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.