காத்தான்குடி கடற்கரையோரமெங்கும் வாவித் தாவரக் கழிவுகள் ஆக்கரமிப்பு அப்புறப்படுத்துவதில் நகர சபை பகீரதப் பிரயத்தனம்.



-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையோரமெங்கும் மட்டக்களப்பு வாவியிலிருந்து கடலை நோக்கி அள்ளுண்டு சென்ற வாவித் தாவரக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளன.

பல கிலோமீற்றர்கள் பரப்பில் இந்தத் தாவரக் கழிவுகள் கடற்கரை நெடுகிலும் ஒதுங்கியுள்


சமீபத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் திறக்கப்பட்டு பொங்கிப் பெருக்கெடுத்த வாவி வெள்ள நீர் கடலுக்குள் கரைபுரண்டோட வழியேற்படுத்தப்பட்டது.

இவ்வேளையிலேயே இந்த வாவித் தாவரங்களும் வாவி வெள்ள நீரோடு அள்ளுண்டு கடலுக்குள் சென்று அவை மீண்டும் கடல் அலையால் கரைக்குக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களும் கரையோர சமுதாய மக்களும் தெரிவிக்கின்றனர்.


கடந்த இரண்டொரு தினங்களாக கரையொதுங்கிக் கொண்டிருக்கும் இந்த வாவித் தாவரங்களால் கடல் மீன் பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, காத்தான்குடி கடற்கரையைத் தமது பொழுதுபோக்கிற்காகவும் உல்லாசத்திற்காகவும் களிக்க வருவோர் இந்த வாவித் தாவரங்களின் கரையோர ஆக்கிரமிப்பால் கடற்கரையைப் பயன்படுத்த முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.


எவ்வாறேனும் ஏற்கெனவே வேலைப்பளுவாக உள்ள திண்மக் கழிவகற்றல் வேலைகளோடு புதிய வரவாக வாவித் தாவரங்களின் ஒதுக்கமும் ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.