கிராமத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

கிராமத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கிராமிய தொண்டர் தொடர்பாடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக  ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் நிர்வாகம் மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான அக்கலங்க ஹெட்டி ஆரச்சி அறிவித்துள்ளார்.

அந்த வகையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிற்கான கிராமிய தொண்டர் தொடர்பாடல் அதிகாரியாக  ஐ.எம். தாஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது விடயமான நியமனக் கடிதத்தில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் நிர்வாகம் மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான அக்கலங்க ஹெட்டி ஆரச்சி மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விசேட செயற்திட்டமும் நிகழ்ச்சித் திட்டமும் கிராம மட்டத்தில் அடையாளப்படுத்துவற்காகவும் கிராமத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் இணைப்பை  ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய தேவையான உதவி ஒத்தாசைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நோக்கோடு அமைக்கப்;பட்டிருக்கும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டமானது அதனுடன் மக்கள் தொடர்பாடல் தேசிய திட்டத்தின் நடவடிக்கைக்காகவும் கிராமிய தொண்டர் தொடர்பாடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

ஜனாதிபதி காரியாலமும் அதனுடன் இணைந்த இலங்கை பூராகவும் காணப்படும் தேசிய மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்தில் உறுப்பினராகச் சேவையாற்றுவதற்கு தேவையான விளக்கமும் பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.