கிழக்கில் அடைமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ஞானம் மற்றும் லைகா குழுமம் நிறுவனங்களினால் உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் நிவாரண விநியோகம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

கிழக்கில் அடைமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா குழுமம் நிறுவனங்களினால் உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் நிவாரண விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிவாரண விநியோகம் இரண்டாம் கட்டமாக திங்கட்கிழமையும் 03.12.2018 இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்hவெளி, ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று, கிரான், ஏறாவூர்ப்பற்று, வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிவாரண உலருணவுகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள்.விநியோகிக்கப்பட்ட உலருணவுப் பொதியில் அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பிஸ்கட், ரின் மீன், பால்மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்கியிருந்தன.

மேலும், குடிநீர் போத்தல்கள், படுக்கை விரிப்புக்கள், கூரைத் தகடுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.


பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், இடர் முகாமைத்துவ பிரிவின் அலுவலர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சர்வதேச ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா குழுமம் நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் நிவாரணப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.