நவலங்கா சுப்பர் சிட்டி அறிமுகப்படுத்தும் புதிய ஒன்லைன் சேவை


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
விற்பனையில் முன்னணியில் திகழும் நவலங்கா சுப்பர் சிட்டி நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி தமது இருப்பிடங்களில் இருந்து கொண்டே பொருட்களைக் கொள்வனவு செய்யும் புதிய ஒன்லைன் திட்டம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (07) முதல் அறிமுகம் செய்துள்ளது.
தெஹிவளையில் அதன் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் 100 பிராண்டுகளில் 2500 தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் ஒன்லைன் மூலம் ஓடர்செய்து பெற்றுக் கொள்ளலாம்.

3000 ரூபாவுக்கு மேல் பொருட்களைக் கொள்வனவு செய்தால் 8 கிலோமீட்டருக்குள் கொள்வனவு செய்த பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவதற்கு நவலங்கா ஒன்லைன் சுப்பர் சிட்டி நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இச்சேவையை ஆரம்பம் செய்யும் நிகழ்வு இரத்மலானையிலுள்ள CBSE கல்லூரியின்  பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நவலங்கா சுப்பர் சிட்டியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எம்.ஏ. காதர் இத்திட்டத்தினை ஆரம்பம் செய்து வைத்தார்.

இதன் போது நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சப்றாஸ் காதர் நிறுவனத்தின் செயற்பாடுகள்பணிகள் மற்றும் எதிர்கால சேவைகள் குறித்து இதன்போது விளக்கமளித்தார்.
நுகர்வோர் மற்றும் வடிக்கையாளர்கள் http://www.navalanka.lk/ எனும் இணையத்தளம் மூலம் பிரவேசித்து இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

ஒருமுறை ஒன்லைன் மூலம் பொருட்களை வாங்கிப் பாருங்கள் அப்புறம் புதிய ஒன்லைன் வசதி பற்றியும் ஒன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் உள்ள இலகு பற்றியும் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
படத்தில் நிறைவேற்று பணிப்பாளர் சப்றாஸ் காதர் உரையாற்றுவதையும் நவலங்கா சுப்பர் சிட்டி நிறுவனத்தின் ஸ்தாப பணிப்பாளர் எம்.எம்.ஏ. காதர் உட்பட நிறுவன உறுப்பினர்களையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.