இன ஐக்கிய சமாதான செயற்பாடுகளில் ஊடகங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கள் அவசியம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-- 

இன ஐக்கிய சமாதான செயற்பாடுகளில் ஊடகங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கள் அவசியம் என எதிர்பார்ப்பதாக எகெட் (EHED) கரிடாஸ் (CARITAS) ஆகிய நிறுவனங்களின்  சர்வமத சமாதான ஆலோசனைக் குழுவின் இணைப்பாளர் இக்னேசஸ் சில்வெஸ்டர் தெரிவித்தார்.

இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் சர்வமத செயற்பாடுகளில் ஊடகத்தின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் எகெட்  (EHED) கரிடாஸ் (CARITAS) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும்  சர்வமத சமாதான ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெரியப்படுத்தும் செயலமர்வு சனிக்கிழமை (01.12.2018) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.


எகெட் (EHED)) கரிடாஸ் (CARITAS) ஆகிய நிறுவனங்களின்  சர்வமத சமாதான ஆலோசனைக் குழுவின் தலைவர் ஏ.ஜே.எம். இல்யாஸ், பிரதித் திலைவர் சிவசிஸ்ரீ கிருஷ்ணபிள்ளை சிவபாலன், அரசியல் ஆய்வாளருமான வளவாளரஏ. ஜதீந்திரன் உட்பட இன்னும் சமூகநல அமைப்புக்களின் சமாதான ஆர்வலர்களும் கலந்து கொண்டு சமாதானத்தை வலியுறுத்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.

பல்லின மக்களை இணைத்து சகவாழ்வு வாழ்வதற்காக  சர்வமத சமாதான ஆலோசனைக் குழுவின் உருவாக்கம் ஆரையம்பதி, கல்லடி, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் செயல்படுவதாகவும் சமாதானம் மற்றும் சகோதரத்துவம் காக்கப்படுவதற்காக தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து பதுளை. ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று  சிங்கள மக்களோடு அளவளாவி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறவுப் பாலமாக இவ்வாலோசனைக் குழு செயற்படுவதாக இணைப்பாளர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளர் ஏ. ஜதீந்திரன் சமூகநல்லிணக்கத்திற்காக தகவல்களை கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பும் எதிர்கொள்ளும் சவால்களும் நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

இன, மத, அரசியல், பொருளாதார நலன்களுக்கப்பால் சமாதானத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என்று இங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.