யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது.



பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாசலுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிர்மாணிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.எனினும் இப்பள்ளிவாசல் விரைவாக பூர்த்தி அடைய    மாணவர்களால்   பல முயற்சிகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறன.

மேற்படி வளாகத்தில் தற்போது வரை சுமார் 105 க்கு மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் பொறியியல் பீடம் விவசாய பீடம் தொழில்நுட்ப பீடம் ஆகிய மூன்று பீடங்களில் கல்வி கற்றுவருகின்றனர்.



மேலும்  வளாகத்தில்  நாட்டின் பல பிரதேசத்தில் இருந்தும் பல கலாசாரத்தை கொண்ட மாணவர்கள் தமது கல்வியை தொடருகின்ற நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம்  ஒவ்வொருடைய கலாச்சாரத்தை மதித்து நான்கு இனத்தவருக்கும் அவர்களுடைய மத வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் முஸ்லீம் மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்  முதல் கட்டமாக தற்காலிகமாக ஒரு பள்ளிவாசல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக கிட்டதட்ட ரூபாய் 6 மில்லியன் தேவைப்படுவதாகவும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஸ்லீஸ் அமைப்பு   உதவும் நல்லுள்ளங்களிடம் இருந்து உதவியை  எதிர்பார்க்கிறது



எனவே அவ்வுதவியை   செய்ய விருப்பமானவர்கள் தொடர்புகளிற்கு கீழ் உள்ள பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Mas. Abdur Rahman 
(Auditor. Muslim Majlis. University of jaffna )
0771504154 / 0717310838

Mas. A.Ajmal Hussain
(2nd year. Faculty of Technology. University of Jaffna)
0715430376
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.