காத்தான்குடியில் பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை .




(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை ஆரம்ப வகுப்புக்கள் துவக்கம் உயர்தர வகுப்புகள் வரையிலான  பிரத்தியேக வகுப்புகள், அல் குர் ஆன் பாடசாலைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறையை மாணவர்கள் சிறந்த முறையில் அனுபவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், சுகாதார பணிமனை ஆகியன இணைந்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இத் தடையை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் பிரத்தியேக வகுப்புகள், அல் குர் ஆன் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.