செனட்டர் மஷுர் மௌலானாவின் 3 ஆவது வருட நினைவு தினம் இன்று


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நாவண்மை காரணமாக நாவலர்’ என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த மர்ஹும் செனட்டர் மஷுர் மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப் பிரிந்தார்.
இன்று (04) செவ்வாய்க்கிழமை அவர் மறைந்து 3 ஆவது  வருட  நினைவு தினமாகும். 
நல்ல பேச்சாற்றலும் திறமையும் கொண்ட மஷுர் மௌலானாதனது 17ஆவது வயதிலே தமிழரசுக் கட்சியின் தலைவர்  தந்தை செல்வநாயகத்தை பின்பற்றி பாடசாலை வாழ்விலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துசொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட செ. இராசதுரையுடன் இணைந்து மட்டுநகர் சென்று தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது பாடுபட்டுழைத்தார்.
மருதமுனை மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் ஆளுமைமிக்க மனிதர் மஷுர் மௌலானாதமது அரசியல் வாழ்வில் அடைந்ததை விட இழந்தது அதிகம் எனலாம்.
கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வெறியாட்டமாக மூண்டதால்  வெறியர்களால் பேரையாற்றில் தூக்கி வீசப்பட்ட அவர்படுகாயங்களுடன் உயிர்தப்பியமை விஷேட நிகழ்வாகும்.
பொதுநலப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட இந்த அற்புத மனிதரின் வரலாற்று பயணங்கள் கவலைக்குரியவை.
1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போராட்டத்தினால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள்கட்சிப்போராளிகள் ஆகியோரைக் கைதுசெய்து அரசு வீட்டுக்காவலில் தடுத்து வைத்தது. இதில் மஷுர் மௌலானாவும் தடுத்து வைக்கப்பட்டார்.
அக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களையும் கட்சியின் தொண்டர்களையும் நன்கறிந்து வைத்திருந்த மசூர் மௌலானாகட்சி சம்பந்தமான எந்தப் போராட்டத்திலும் மனங்கோணாது தன்னுடைய பங்களிப்பை வழங்கினார்.
மஷுர் மௌலானா மருதமுனைக்கோ அம்பாறை மாவட்டத்துக்கோ அல்லது கிழக்கு மாகாணத்துக்கே மட்டும் உரிதான ஒரு சொத்து அல்ல.
இலங்கை வாழ் மக்களின் அதிக ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்ததுடன் இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்தின் உயரிய முதுஷம்’ எனவும் கட்சித் தலைமைகளால் அழைக்கப்பட்டவர்.
மர்ஹும் மஷுர் மௌலானா நீண்ட கால அரசியல் வரலாற்றுக்கு உரித்தானவர்.
சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட செனட்சபையில் அங்கம் வகித்த இருவருள் ஒருவராகதனது 35ஆவது வயதில் அதாவது 1967ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 20ஆம் திகதி செனட்டராகப் பதவியேற்றார்.
மஷுர் மௌலானா செல்லாத கூட்டங்கள் அன்று எங்கும் இடம்பெற்றிருக்க முடியாது. தமிழினத்தின் தன்மானக் குரலை மீட்டிய போதெல்லாம் அதற்கு குரல் கொடுத்து உணர்ச்சி ஊட்டியவர் மஷுர் மௌலானா.
எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது தாயகமான மருதமுனை பற்றி அவர் எவ்வேளையிலும் பிரஸ்தாபிக்காமல் இருந்ததில்லை.
வடகிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுக்கு முதற் பாலமாக வரலாற்றில் தடம் பதித்த இவர்கொழும்பு சாஹிராவில் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.
பலருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு இயலுமான பணிகளை செஞ்சுக்கு நிறைவாகச் செய்தவர். தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து பலரது வாழ்வுக்கு வளம் சேர்த்துஏழை மக்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
கரவாகு வடக்கு கிராமசபையின் தலைவர்கல்முனை மாநகர சபையின் உதவி மேயர்கல்முனை மாநகரசபையின் மாநகர முதல்வர்இலங்கை - இந்திய முதலாவது செயலர் உட்பட பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.
இவர் செய்த சேவைகளில் மஷுர் மௌலானா வீதிபிரேமதாச காலத்தில் நிறுவப்பட்ட மஷுர் மௌலானா வீட்டுத்திட்டம்மஷுர் மௌலானா மைதானம்,போன்றன குறிப்பிடத்தக்கன.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் அமைச்சராக இருந்த வேளைதனது நண்பன் மேல் உள்ள அன்பினால் மருதமுனையில் விளையாட்டு மேம்பாட்டுக்கு தமது பன்முக நிதியிலிருந்து பணம் ஒதுக்கிபார்வையாளர் அரங்கை நிர்மாணித்து கொடுத்து நட்பை வெளிப்படுத்தினார்.
அந்தப் பார்வையாளர் அரங்குசுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையிலும் உடையாமல் நின்று நட்புக்கு உதாரணமாக இருந்ததாக அவர் தனது சகாக்களுடன் சுவாரஷ்யமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது பெருமிதத்துடன் கூறுவார்.
மஷுர் மௌலானாதனது சாச்சா பாரி மௌலானாவின் மகளான  புஷ்ரத்துன் நயீமாவை மணமுடித்துஅவரின் முதற்குழந்தை 13 மாதக் குழந்தையாக இருக்கும் போது மரணமாகிவிட்டது. அதன்பின்  யஸ்மின்அக்ரம்சியாம்மபாஹிர்இல்ஹாம்நௌஸாத் ஆகிய ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
மு.கா.ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மருதமுனை மண்ணில் நடந்த  ஒரு கூட்டத்தில், “மஷுர் மௌலானாவின் அரசியல் ஞானத்தையும்சாணக்கியத்தையும் மிக உயர்வாக மதிக்கும் நான்இனி அவரை பிரதேச சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ எடுத்துச் செல்லமாட்டேன். அவரை இப்படியே பிடித்து பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் அமர்த்துவேன்” என மௌலானாவின் கரங்களைப் பிடித்து மேலே உயர்த்தி வாக்குறுதியளித்தார்.
வாக்குறுதி தந்த தலைவர் மரணமாகிவிட்டதால்மஷுர் மௌலானா மரணிக்கும் வரை அது அவரின்  கனவாகவே இருந்தது.
மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய மர்ஹும் மஷுர் மெளாலானாவின் ஜனாஸா அவர் விருப்பின் பேரில் அவர் பிறந்த இடமான மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து இறைவன் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.