மார்க்க விடயங்கள் பலவற்றினை அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நழீமியிடமிருந்து கற்றுக்கொண்டதுமாத்திரமல்லாது பல விடயங்களை இன்றுவரை பின்பற்றிக் கொண்டிருக்கின்றேன் சிப்லி பாறுாக்இஸ்லாமிய மார்க்க விடயங்கள் பலவற்றினை அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நழீமியிடமிருந்து  நான் கற்றுக்கொண்டது மாத்திரமல்லாது  பல விடயங்களை இன்றுவரை பின்பற்றிக் கொண்டிருக்கின்றேன்  என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்  சிப்லி பாறுாக் தனது முகநுால் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.அவர் தனது  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் 
கடந்த (23.11.2018 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில்  காத்தான்குடி  மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற இஜ்திமாவில் சகோதரர் அஷ்ஷெய்க் எம்.அக்றம் (நழீமி) அவர்கள் ”நபிகளாரின் (ஸல்) அழகிய பண்பாடுகள் பற்றியும் அவர்களுடைய இரக்க சுபாவத்தைபற்றியும் இன்னும் பல நற்குணங்கள் பற்றியும் மிக அழகாகவும் மனதை தொடும்வகையிலும் எளிய உரைநடையில்  சொற்பொழிவு  ஒன்றினை நிகழ்தியிருந்தார். இவருடைய இந்த தூய தஃவா பணியை இறைவன் ஒப்புக்கொள்வானாக. 


ஒரு காலத்தில் காத்தான்குடியில்  இவர் போன்று மிக அழகாகவும், ஆழமான கருத்துடனும் கூடிய மிக நல்ல சொற்பொழிவுகளையும் ஜும்மா பிரசங்கங்களையும் காத்தான்குடி சகோதரர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தெளஸ் (நழீமி) நிகழ்த்தினால் அவருடைய நிகழ்வுகளை கேட்க என்ன வேலைகள் இருந்தாலும் அதனை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொண்டு அதிக விடயங்களை கற்றுக்கொண்டதுமாத்திரமல்லாது பல விடயங்களை இன்றுவரை பின்பற்றிக் கொண்டிருக்கின்றேன். என்போண்ற எத்தனையோ சகோதர சகோதரிகள் அவருடைய உபதேசங்களால் மார்க்கத்தை கற்று அதன்மீது அக்கரைகொண்டு பின்பற்றுவதை அனுபவரீதியாக கண்டு கொண்டுள்ளேன். மிகவும் திறமையான தஃவாப்பணியை செய்யக்கூடிய இவர்போன்றவர்களிடம் இருந்து இந்த சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெறுமதியான மார்க்க வழிகாட்டல்கள் அரசியல் கட்சி சார்ந்தவர் என்று சாயம் பூசி அவரிடம் இருந்து தமிழ் பேசும் முஸ்லிம் உம்மத்திற்குவிற்கு உலகளாவியரீதியில் கிடைக்க வேண்டிய மார்க்க விளக்கங்கள் கிடைக்காமல் தடுப்பதென்பது மிகப்பெரும் அநியாயமாக நான் பார்க்கின்றேன். 
ஒருவருடைய அரசியல் உரிமை என்பது அவருக்கான தனிப்பட்ட சுதந்திரம் இதனை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இவர்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய இஸ்லாமிய அறிவூட்டல்களுக்கு நமது காத்தான்குடி ஜம்மியதுல் உலமா, தஃவா அமைப்புக்கள் களம் அமைத்துக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

 இது மாத்திரம்அன்றி சகோதரர் அஷ்ஷெய்ஹ் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நழீமி) அவர்களும் இதனை என்போண்றவர்களுனுடைய ஒரு பணிவான வேண்டுகோளாக ஏற்று மீண்டும் இந்த பகிரங்க தஃவா கழத்திற்கு தன்னுடைய பங்களிப்பை செய்யவேண்டும் 

குறிப்பு: சகோதரர்  எம்.பீ.எம்.  பிர்தௌஸ் நழீமி அவர்களுடைய அரசியல் கொள்கை, அரசியல் ஈடுபாடுகள் அது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் ஆனால் தஃவா முழு மனித சமூகத்திற்குமான ஓர் பாரிய பொறுப்பு இதற்கு அரசியல் ஒருபோதும் தடையாக அமையக்கூடாது. 
இவ்வாறு  முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்  சிப்லி பாறுாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.