இலங்கை மழைநீர் சேகரிப்பு மையம் ஏற்பாடு செய்த நடைபவணிஇலங்கை மழைநீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழைய நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி ஜயவர்தனபுர கிபுலாவல சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018)  காலை நடைபெற்றது.


இதில் மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும்  இந்தியா, நேபாளம், பங்களாதேசம் முதலான நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.