இஸ்லாத்துக்கு எதிரான சவால்களை முறியடிக்க ஒன்றுபடுவோம்! மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு



இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம் - என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  தெரிவித்தார். 

மீலாத் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 

“முழு உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அகிலம் போற்றும் உத்தம நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இத் தருணத்தில் இந்நாட்டில் வாழும் அனைவருக்கும் எனது இதயங்களிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்;கின்றேன்.

உத்தம இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் வேதம் ஆக்கச் செயற்பாடுகளுக்கு மிகத் தெளிவான செயலூக்கம் கொடுக்கும் வகையிலேயே இந்த அகிலத்திற்கு வழிகாட்டுகின்றது.

அதன் மூலம் அனைத்து மனித குலத்தையும் ஒருங்கிணைத்து, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளுடன் சுமூகமான வாழ்க்கை முறையொன்றை நிலை நிறுத்துவதே எம் பெருமானார் போதிக்கும் சன்மார்க்கத்;தின் அடிப்படையான விடயமாகும்.

எந்த சந்தர்;ப்பத்;திலும் அழிவுச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றும் எவரும் எந்த வகையிலும் பங்குதாரர்களாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனவே, அதன் அடிப்படையில் முன்மாதிரியான ஓர் மிகச் சிறந்த சமூகமாக இந்த நாட்டில் வாழ்வதோடு எமது தாய் நாட்டை உலகிலேயே சிறந்த தேசமாகக் கட்டியெழுப்ப இப்புனித நாளில் நாம் அனைவரும் திடசங்கட்பம் பூணுவோம்.

அதேபோன்று எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகிலும் இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம்.

மேலும் இத்தருணத்தில் எல்லாம் வல்ல இறைவனின் அருளும், அன்பும் அனைவர் மீதும் உண்டாவதற்கு பிரார்த்திக்கின்றேன். – என்றார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.