இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகள் அடங்கிய பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியீடு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 
இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகள் அடங்கிய பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி மாவட்டங்களின் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் திருகோணமலை உல்லாச விடுதியில் சனிக்கிழமை 24.11.2018 இந்த அறிக்கை ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பட்டது.



இவ்வாண்டு மார்ச் மாதம் கண்டி, திகன, தெல்தெனிய போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இடம்பெற்ற இன வன்முறைகள்  தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கையுடன் இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகளும் இவ் ஆவண அறிக்கை நூலில் அடங்கியுள்ளதாக கண்டி உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி ஜயவீர தெரிவித்தார்.


இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர்  (Celina Cramer – Program Officer for Peacebuilding and Community Dialog)    தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், தேசிய சமாதானப் பேரவையின் கண்டி, திருகோணமல, மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர்களான ரேணுகா மாலியகொட, எம்.ஏ. சதுராணி ரஷிகா, இராசையா மனோகரன் உட்பட இன்னும் பல துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் பல் சமயப் பெரியார்களும் சமூக நல செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.