ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இளம் பெண் காதலனை கொலை செய்து கறி சமைத்த சம்பவம்


ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரைக் கொலை செய்து அவரது உடலின் எச்சங்களைக் கறியாகச் சமைத்து அதை அருகில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவாகப் பரிமாறியதாக அமீரக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தக் கொலை மூன்று மாதங்களுக்கு முன்னரே நடந்திருந்தாலும் 30 வயதைக் கடந்துள்ள அப்பெண்ணின் சமையலறையில் மனிதப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூர்க்கத்தனமான மனநிலையில் தாம் இந்தக் கொலையைச் செய்ததாக அப்பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசின் செய்தித்தாளான தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஆணுடன் அவர் ஏழு ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார்.

வீரமங்கை ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் இறுதி கணங்கள்
சுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கை
மொரோக்கோவில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆண் தெரிவித்தபின்னரே அப்பெண் அவரை கொலை செய்ததாக தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது காதலரை அப்பெண் எப்படிக் கொலை செய்தார் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ஓமன் எல்லையில் அமைந்துள்ள தங்கள் சொந்த நகரமான அல் அய்ன் பகுதியில் காணாமல் போன தனது சகோதரரைஇ கொல்லப்பட்டவரின் சகோதரர் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் பல்லை மட்டும் கண்டுபிடித்தார்

அது அப்பெண்ணின் காதலரின் பல் என்பது டி.என்.ஏ சோதனைகளின்போது உறுதிசெய்யப்பட்டது.

முதலில் தமது காதலரை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டதாக தேடி வந்த அவரது சகோதரரிடம் அப்பெண் கூறியுள்ளார்.

நண்பர் ஒருவரின் உதவியுடன் அவர் உடல் எச்சங்களை அப்புறப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்பெண் மன நல பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 
sor/bt
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.