தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்......


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
2019 ஆம் ஆண்டுக்கான நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேரபகுதி நேர பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
20 பாடநெறிகளுக்கு தமிழ் - சிங்கள மொழி மூலம் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகளிலிருந்து அவர்களின் தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தெரிவு செய்யப்பட்டுகற்கை நெறிக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
A 4 தாளில் விண்ணப்படிவத்தை தயாரித்து 2018.12.03 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு அல்லது அதிபருக்குக் கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் அறிய நவம்பர் மாதம் 02ஆம் திகதி வெளியான வர்த்தமானி பத்திரிகையைப் பார்க்கவும். அல்லது www.dtet.gov.lk என்ற இணையத்தளம் மூலமாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்அத்தோடுவிண்ணப்பபடிவங்களை அவ்விணையத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.