தேசிய மீலாத் விழா அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கொழும்பில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ



முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீலாத் விழா -2018 நிகழ்வு  எதிர்வரும் 20ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

தேசிய மீலாத் நிகழ்வு இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில் குறித்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 

நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் வாழ்க்கை வழிமுறையையும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படும் மீலாதுன் நபி விழாவின் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுக்கு அறிவூட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.