-எம். எச். எம். அன்வர்-
காத்தான்குடி பிரதேசத்தில் அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது நாம் எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அதற்கான முன்ஆயத்தங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று திங்கள் 19.11.2018 அன்று காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் யூ. உதயசிரீதர் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி செயலமர்வில் வெள்ள அபாயம், சுனாமி, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் இதற்கான நிவாரண உதவிகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களின்போது எவ்வாறான உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக வெள்ளம் ஏற்படும்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கே சமைத்த உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அனர்த்தங்களின் போது உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் ஏற்பட்டால் இதற்கான பகுதி இழப்பு மற்றும் முழுமையான இழப்புக்களுக்காக அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன், நகர சபை உறுப்பினர்களான கே.எல் எம் பரீட், சல்மா அமீர் ஹம்ஸா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறவனங்கள் சம்மேளன தலைவர் .ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மற்றும் செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment