கல்முனை சாஹிராவின் புதிய அதிபராக எம்.ஐ.ஜாபிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆண்கள் கல்வி பயிலும் பிரபல பாடசாலையான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் ஜாபிர் நியமிக்கப்பட்டு,  உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தனது ஆரம்பக் கல்விய கமு/ அல் கமறூன் வித்தியாலயத்தில் கற்ற இவர்இடை நிலைக் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் பயின்றார். 
இதே பாடசாலையின் பழைய மாணவரான இவர்தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன் 2003 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றுகடந்த 15 வருடங்கள் கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீ.எஸ்.சி (விஞ்ஞான இளமாணி - கணக்கியல்துறை) B.SC (Acc & Fin) Hons பட்டம் பெற்றதோடுபட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) (திறந்த பல்கலைக்கழகம்)கல்வி முதுமாணி (கிழக்கு பல்கலைக்கழகம்)ஆங்கிலத்தில் டிப்ளோமா (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கணனியில் டிப்ளோமா போன்ற பட்டங்களை பெற்று அனைத்து டிப்ளோமா கற்கையிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

2017 கல்விச் சேவைக்குள் இணைந்த இவர்கல்வித்துறையின் மூன்று சேவைகளான அதிபர் சேவை (SLPS), கல்வி நிர்வாக சேவை (SLEAS),ஆசிரியர் கல்வியலாளர் சேவை (SLTES) ஆகிய சேவைகளின் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றி, 3 சேவைகளிலும் ஒரு வருட காலத்திற்குள் சிறப்புத் தேர்ச்சி பெற்று சித்தியடைந்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்றுகடமைகளைப் பொறுப்பேற்ற எம்.ஐ.ஜாபிர் அதிபருக்கு பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் பழைய -- புதிய மாணவர்கள்கல்விச் சமூகத்தினர்பெற்றோர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஆளுமையும்தலைமைத்துவ இயல்பும்அனைவரோடும் நேர்மையாக பழகும் பண்பும் கொண்ட எம்.ஐ. ஜாபிர் அதிபரின் வருகையால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மேலும் முன்னேற்றமடைந்து இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என பாடசாலையின் பழைய - புதிய மாணவர்கள்பாடசாலை சமூகத்தினர்கல்விச் சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.