ஆசிரியர் பணியில் பொன்விழா காணும் நிசார் உடையார் ஆசிரியருக்கு விருதுஆசிரியர் பணியில் பொன் விழா காணும் பிரபல தமிழ் ஆசிரியரும், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் பிரதியதிபருமான நிசார் உடையார், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க அமீரக கிளையின் ஏற்பாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அபூ தாபி நகரில் நடைபெற்ற விருது விழங்கும் நிகழ்வில்,  மாவனல்லை ஸாஹிராhக் கல்லூரியின் நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து சிறப்பித்தனர். 

ஆசிரியர் பணியில் பொன் விழா காணும் எச்.எம்.யூ. நிசார் உடையார் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு ஆற்றியுள்ள சேவைகள் செல்லில் அடங்காதவை. பிரதி அதிபராகவும், சிரேஷ்ட தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றிய இவரின் காலம் பாடசாலையின் பொற்காலம் என கருதப்படுகின்றது.
 

மாவனல்லை மண்ணில் முக்கிய பிரமுகராக திகழ்கின்ற இவர்,  பாடசாலை அபிவிருத்தி, வளங்களை விருத்தி செய்தல், தரமான வசதிகளை ஏற்படுத்தல், ஆசிரியர்களை வழி நடத்துதல், மாணவர்களின் ஒழுக்க நலன்களை வளர்த்தல், தூர நோக்கு திட்டமிடல் போன்ற செயல் பாடுகளினால் பல தலை முறைகளை வழிநடாத்தியன் மூலம் மாவனல்லை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். 

(தகவல்:- ஷம்ரான் நவாஸ்-டுபாய்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.