பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தும் பஸ், ஆட்டோவின் கட்டணம் குறையவில்லை பயணிகள் விசனம்!(எம்.எஸ்.எம். ஸாகிர்)
எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுபெற்றொல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பஸ்ஆட்டோ ஆகியவற்றுக்கு அறவிடப்படும் கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை என பயணிகளான பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எரிபொருட்களின் விலைகள் 2 தடவைகள் குறைக்கப்பட்டிருந்தும் ஏன் இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுகின்றனர் எனவும் கட்டணங்களை கூட்டுவதில் எடுக்கும் ஆர்வம் ஏன் விலை குறைக்கப்படும் போது அமுலுக்கு கொண்டு வருவதில் தாமதத்தைக் கையாளுகின்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் பாரா முகமாக இருப்பது பற்றியும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள்நடத்துனர்கள்சாரதிகள்கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அறிவித்தல் வந்தவுடன் எடுக்கும் துரித நடவடிக்கைகளைகட்டணங்கள் குறைக்கப்படும் போது கவனத்தில் கொள்வதில்லை எனவும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பொது மக்களின் நலன்கருதிபாமர மக்களும் பயனடையும் வகையில் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஜனாதிபதிபிரதமர்மற்றும் போக்குவரத்து அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் இவ்வேண்டுகோளை கவனத்தில் எடுப்பார்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.