மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமனம்மட்டக்களப்பு மத்தி   வலயக் அலுவலக  வலயக்கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த டொக்டர்  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப் பட்டுள்ளார் .

இந்த நியமனம் கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக் கல்வி விளையாட்டுத்துறை  பண்பாட்டலுவல்கள் இஇளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஐ.ஜி .கே. முத்துபண்டாவினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 13.11.2018 இலிருந்து செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது.


அரச கல்வி நிருவாக சேவை தரம்- 11 அதிகாரியான டொக்டர்  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா  மருதமுனை அல் -மனார் மத்திய  கல்லூரியின் அதிபராகவும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக்  கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர் . தற்போது கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையிலிருக்கும் போதே மட்டக்களப்பு மத்தி   வலயக் அலுவலக  வலயக்கல்விப்  பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
sor/k.news

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.